தமிழிசையின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகத்திற்கு பகிர்வதுதான் உலகத் தமிழிசை மேம்பாட்டு மையத்தின் நோக்கமாகும். நாங்கள் தமிழிசையையும் அதன் இலக்கியங்களையும் பாதுகாக்கவும் மேலும் ஊக்குவிக்கவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். காலத்தால் அழியாத தமிழிசையின் வளத்தை உலகில் உள்ளோர் அறியவும் சென்றடையவும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
நாங்கள் தனித்துவமான தமிழிசை மரபை கொண்டாடி ஆவணப்படுத்துகிறோம்.
நாங்கள் கட்டுரைகள், பல்கலைக்கழகப் படிப்புகள் மற்றும் பிற கற்றல் தளங்கள் மூலம் தமிழிசையையும் அதன் இலக்கியக் களஞ்சியங்களையும் ஆராய்ந்து புரிந்துகொள்ள அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குகிறோம்.
உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் தமிழிசை நிகழ்வின் உருவாக்கத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதன் மூலம் உலகளாவிய உறுப்பினர்கள் தமிழிசையின் வளர்ச்சியில் இணையவும், ஒத்துழைக்கவும், பங்களிக்கவும் முடியும்.
இந்த உலகளாவிய முயற்சியில் நீங்களும் ஒரு பங்காளராக இருங்கள்! நீங்கள் ஓர் ஆர்வலராக அல்லது ஓர் அறிஞராக அல்லது கலாச்சார ஆதரவாளராக இருக்கலாம். எங்கள் அமைப்பு உங்களை உறுப்பினராக்கிட வரவேற்கிறது. இதன் மூலம் நாம் ஒன்றாக இணைந்து, வரும் தலைமுறையினருக்கு தமிழிசையின் மேன்மையையும் வளத்தையும் எடுத்துச்சென்று விரிவுபடுத்த முடியும்.
©2025. WTMDC. All Rights Reserved.